Saturday, July 16, 2011

மதுரை தொடர்ச்சி.................

பழமையான நகரம் மற்றும் ஒரு பெரிய கிராமம் அப்படி தான் சொல்ல வேண்டும்..
நான் பிறந்ததுதான் மதுரை என்றாலும் என் தந்தை அரசு பணியில் இருந்ததால் பெரும்பாலும் நான் விடுமுறைக்கு மட்டுமே மதுரை வருவேன் ( சராசரியாக மாதத்திற்கு 5 நாட்கள், பள்ளி விடுமுறை அல்ல நான் எடுக்கும் விடுமுறை)
என் அம்மா, அப்பா ஊர் இரண்டுமே மதுரை தான் ஒரே தெரு சொந்தம் வேறு....அதனால் மதுரைதான் பெற்றோருக்கு தலைமை செயலகம். இதனால் பல வசதிகள் மற்றும் சங்கடங்கள்....
சிறுவயது மதுரை நன்றாக நினைவில் இருக்கிறது
திருவிழாவுக்கு நடந்தே செல்வது, தீபாவளி டிரெஸ் எடுக்க அம்மன் சன்னதி செல்வது, மனோரமா ஹோட்டல் ராக்கெட் தோசை, நாகப்பட்டினம் நெய் மிட்டாய் கடை அல்வா இப்படி பல
அப்போது எல்லாம் இப்படி கூட்டம் கிடையாது...
தீனிக்காகவே நடந்து சென்று நாள் முழுதும் காத்திருந்து இரவில் குதிரை வண்டியில் வரும் சுகம் இருக்கிறதே
அது ஒரு வசந்த காலம் இப்போ அது கனா காலம்....................

Friday, July 15, 2011

மதுரை

மதுரை
இந்த ஊரை பத்தி எழுதிக்கொண்டே போகலாம் இதன் சிறப்புகள்
தமிழ் சங்கம், மீனாக்ஷி அம்மன் கோயில், சித்திரை திருவிழா, கள்ளழகர் ஆற்றில் இறங்குதல், உறங்கா நகரம், இந்தியாவின் வெனிஸ் இப்படி பல இருந்தாலும் அதன் கீரிடத்தில் மேலும் ஒரு வைரமாக .....
1973 ல்
நான் மதுரையில் பிறந்தேன்.....

மீண்டும் ஒரு முயற்சி

ஏதாவது எழுத வேண்டும் என்ற அவா மனதில் தோன்ற பலமுறை முயன்றும் ப்ளாக் தொடங்கியும் தொடர முடியவில்லை மீண்டும் ஒரு முயற்சி
இன்று புதியதாய் பிறந்த நுண்ணலைகள் பிளாக்
முதலில் நுண்ணலைகள் பற்றி
நுண்ணலைகள் என்பது தொடர்பியல் பொறியியலில் ( Communication Engineering) ஒரு வரப்பிரசாதமாகும் இதன் மூலம் தான் கம்பியில்லா தொடர்பும் (Wireless Communication) பிற நகரங்கள், நாடுகள் (STD, ISD) தொடர்பும் உருவாக்க முடியும்.
இப்பொழுது அனைவர் கையில் பாக்கெட்டில் இருக்கும் மொபைல் போன் தொடர்புக்கும் இது அவசியம்
என்னுடைய அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவே இந்த நுண்ணலைகள் ப்ளாக்