Saturday, July 16, 2011

மதுரை தொடர்ச்சி.................

பழமையான நகரம் மற்றும் ஒரு பெரிய கிராமம் அப்படி தான் சொல்ல வேண்டும்..
நான் பிறந்ததுதான் மதுரை என்றாலும் என் தந்தை அரசு பணியில் இருந்ததால் பெரும்பாலும் நான் விடுமுறைக்கு மட்டுமே மதுரை வருவேன் ( சராசரியாக மாதத்திற்கு 5 நாட்கள், பள்ளி விடுமுறை அல்ல நான் எடுக்கும் விடுமுறை)
என் அம்மா, அப்பா ஊர் இரண்டுமே மதுரை தான் ஒரே தெரு சொந்தம் வேறு....அதனால் மதுரைதான் பெற்றோருக்கு தலைமை செயலகம். இதனால் பல வசதிகள் மற்றும் சங்கடங்கள்....
சிறுவயது மதுரை நன்றாக நினைவில் இருக்கிறது
திருவிழாவுக்கு நடந்தே செல்வது, தீபாவளி டிரெஸ் எடுக்க அம்மன் சன்னதி செல்வது, மனோரமா ஹோட்டல் ராக்கெட் தோசை, நாகப்பட்டினம் நெய் மிட்டாய் கடை அல்வா இப்படி பல
அப்போது எல்லாம் இப்படி கூட்டம் கிடையாது...
தீனிக்காகவே நடந்து சென்று நாள் முழுதும் காத்திருந்து இரவில் குதிரை வண்டியில் வரும் சுகம் இருக்கிறதே
அது ஒரு வசந்த காலம் இப்போ அது கனா காலம்....................

No comments:

Post a Comment